`கிரிக்கெட், கூண்டுப்புலி, பாசப்புலி - சட்டசபையில் நடக்கும் காரசார விவாதமும், நகைச்சுவை பேச்சுக்களும்....

Advertisement

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பட்ஜெட் குறித்த விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் அ.தி.மு.க - தி.மு.க இடையே காரசாரமான வார்த்தைப் போரும் அதேநேரம் சில நகைசுவை சம்பவங்களும் நடந்து வருகின்றன. நேற்றைய கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக எம்எல்ஏ செம்மலை, ``பொங்கலுக்கு 1,000 ரூபாய் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் சிக்ஸர் அடித்தார். தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் மூலம் முதல்வர் சிக்ஸர் அடித்துக்கொண்டிருக்கிறார்" என்று பேசினார். இவரின் பேச்சை கலாய்க்கும் விதமாக இன்று பேசிய தி.மு.க உறுப்பினர் பொன்முடி, ``ஸ்டாலின் வீசும் பந்தில் அ.தி.மு.க ஆட்சி கிளீன் போல்டு ஆகும்" எனப் பேசினார்.

இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் தங்கமணி இருவரும், ``ஸ்டாலின் வீசும் பந்து நோ-பால் ஆகிவிடும்" என்று ஜெய்குமாரும், ``மைதானத்துக்கு உள்ளேயே வராமல் ஸ்டாலின் பந்து வீசிக்கொண்டிருக்கிறார். மைதானத்துக்குள் வந்து வீசப்படும் பந்துதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்" என்று தங்கமணியும் கிரிக்கெட் போட்டியை வைத்து சட்டப்பேரையில் குஸ்தி விளையாடினார்.

இந்தச் சம்பவத்தை போல் இன்னொரு சுவாரஸ்ய சம்பவமும் இன்று நடைபெற்றது. அதாவது, இன்றைய கூட்டத்தில் திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் பேசுகையில், `இந்த ஐந்து ஆண்டுகள் உங்களுடையதுதான். ஐந்தாண்டுகள் என்னுடைய ஆதரவு உங்களுக்கு இருக்கும். நான் முக்குலத்து புலி என்றாலும் பாசப்புலி. ஆனால் அடுத்து வரும் ஆண்டுகள் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்' என்று பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், `புலிப்படையாக இருந்தாலும் எந்தப் படையாக இருந்தாலும் எங்களை எப்போதும் வெல்ல முடியாது' என்றார். தொடர்ந்து துணை முதல்வர், ஓ.பன்னீர் செல்வம், ``இந்தப் பாசப்புலி கூண்டுக்குள் அடைத்து வைத்தால் பாசமாக இருக்குமா’’ என்று கேட்க அவையில் சிரிப்பலை எழுந்தது. இப்படி பட்ஜெட் கூட்டத்தொடரில் தினமும் காரசார விவாதமும், நகைசுவைப் பேச்சுகளாலும் சென்றுகொண்டிருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>