மூடு விழா காணப்போகிறதா மத்திய அரசின் BSNL ? - உயர் அதிகாரி விளக்கம்!

Chennai BSNL dgm says, news about closure is only rumours

by Nagaraj, Feb 15, 2019, 13:36 PM IST

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான BSNL மூடு விழா காணப்போகிறது என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என bjp அந்நிறுவனத்தின் சென்னை மண்டல அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் இந்தியாவில் தொலைபேசி சேவையை வழங்கிய ஒரே நிறுவனம் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மட்டுமே. சமீப காலமாக தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் பிஎஸ்என்எல் தடுமாறுவதாக கூறப்படுகிறது.

கடனும் அதிகரித்து விட்டதால் பங்கு களை விற்பது, ஆட்குறைப்பு செய்வது போன்ற மாற்று வழி பற்றி ஆராய்ந்து வருகிறது. இதனை வைத்து பிஎஸ்என்எல் மூடப்படப் போகிறது என்ற செய்திகள் சில நாட்களாக பரபரப்பாக வெளியானது.

தற்போது இந்த செய்திகளில் உண்மை இல்லை என்றும் வெறும் வதந்தி தான் என்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சென்னை மண்டல பொது மேலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

You'r reading மூடு விழா காணப்போகிறதா மத்திய அரசின் BSNL ? - உயர் அதிகாரி விளக்கம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை