அவுக ரூ500 சி... நீங்க எவ்வளவு தருவீகளாம்... திமுக, அதிமுகவிடம் பேரம் பேசும் மாட்டு வியாபாரியாக மாறிப் போன பாமக!

PMK Targets only Rs 500 Crore

Feb 16, 2019, 17:21 PM IST

பாமகவை மையப்படுத்தியே இந்த தேர்தல் இருப்பதால் கூட்டணிகளை இரு கட்சிகளும் முடிவு செய்யாமல் இருக்கிறது. திமுக, அதிமுக இரு கட்சிகளிடத்திலும் சீட்டு எண்ணிக்கை, தொகுதிகளை விட்டுக்கொடுத்தல் விசயத்தில் பாமக சமரசம் செய்துகொள்கிறது.

ஆனால், 500 சி வரை தேர்தல் செலவு நிதி கேட்கிறது பாமக. இந்த தேர்தலுக்கு 100 சி செலவு செய்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு வசதியாக 400 சியை பதுக்குவதுதான் பாமகவின் திட்டம்.

ஆனால், தேர்தல் நிதி விசயத்தில் திமுக கை விரிக்கிறது. அதிமுக தலைமையோ, 200 சி வரை தர ஒப்புக்கொள்கிறார்கள். இத்தொகையை மேலும் உயர்த்துமாறு கேட்கிறது பாமக.

இந்த சூழலில், பியூஸ்கோயலிடம் நடந்த பேச்சுவார்த்தையில், பாமக நிதி எதிர்பார்ப்பு கூடுதலாக இருக்கிறது. அதனால் 200 சி யை பாஜக கொடுத்து உதவ வேண்டும் என எடப்பாடி தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்திய கொங்கு அமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பியூஸ் கோயலோ, பிரதமரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்த சூழலில்தான் காஷ்மீரில் நடந்த படுகொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாஜக தலைவர்களெல்லாம் அந்த டென்சனில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், பாமகவிடம் பேசிய பியூஸ், அதிமுக தருவதாக சொல்லும் 200 சியை ஒத்துக்கொள்ளுங்கள். மீண்டும் ஆட்சி அமையும் போது 2 அமைச்சர்கள் பாமகவுக்கு ஒதுக்குகிறோம். கடந்த காலத்தில் நடந்த தவறுகள் நடக்காது என உறுதி தந்துள்ளாராம்.

ஆக, பணம் விவகாரம் முடிந்ததும் தனது முடிவை அறிவிக்கவிருக்கிறது பாமக. ஆக, பணமே கூட்டணியை தீர்மானிக்கிறது. இதற்கிடையே, பணம் பணம் என கேவலப்படுத்தப்படுவதால் , கூட்டணியே வேண்டாம். தனித்து போட்டியிடுவோம் என ராமதாசிடம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல காரணங்களையும் விவரித்துள்ளனர்.

-எழில் பிரதீபன்

You'r reading அவுக ரூ500 சி... நீங்க எவ்வளவு தருவீகளாம்... திமுக, அதிமுகவிடம் பேரம் பேசும் மாட்டு வியாபாரியாக மாறிப் போன பாமக! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை