ஸ்டாலின் மருமகன் சபரீசனோடு நள்ளிரவு சந்திப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ் என பாமக தரப்பில் இருந்தே தகவல்களைக் கசியவிடுகிறார்கள். இதன்மூலம், அதிமுக தரப்பை அச்சத்தில் வைத்திருக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
கடந்தகாலக் கசப்புகளை அறிந்ததால், பாமகவை சேர்த்துக் கொள்வது எங்கள் சுயமரியாதைக்கே இழுக்கு எனக் கூறி, அறிவாலயக் கதவுகளை இழுத்து சாத்திவிட்டார் ஸ்டாலின். இப்போது பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கப் போவதை அறிந்து துரைமுருகனைத் தவிர்த்து இதர திமுக பொறுப்பாளர்கள் பலத்த கரகோஷம் எழுப்புகிறார்கள்.
இதைப் பற்றி நடந்த விவாதத்திலும், ராமதாஸ் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்ததால் ஸ்டாலின் உஷாராகிவிட்டார். அவரைக் கூட்டணியில் சேர்த்ததன் மூலம் எடப்பாடி வசமாகச் சிக்கிக் கொண்டார்.
தேர்தல் முடிவதற்குள் பாமகவைப் பற்றி அவர் நன்றாகப் புரிந்து கொள்வார். ஜெயலலிதாவை ஏமாற்ற முடியாது, எடப்பாடி பழனிசாமியை ஏமாற்றுவது சுலபம் என்பதை ராமதாஸ் அறிந்து வைத்திருக்கிறார்.
அதனால்தான் ஆளும்கட்சியிடம் இருந்து வேண்டியதை வாங்கிக் கொண்டார்' எனச் சொல்லி சிரித்தார்களாம். இதில், குறிஞ்சிப்பாடி பன்னீர்செல்வம், ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்டோர் ஏகத்துக்கும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.