திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெறாமல் போன விவகாரத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் குடும்பம் மீது மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் படுபயங்கர கோபத்தில் இருக்கிறாராம்.
வேலூர் தொகுதியில் மகனை வேட்பாளராக்கி பாமக துணையுடன் எம்.பி.யாக்கிவிடலாம் என்பது துரைமுருகன் கனவு. இதற்காக பாமகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட ஸ்டாலின், தமது குடும்பத்தினரிடம் இப்பொறுப்பை ஒப்படைத்தார். இதை அப்போதே துரைமுருகன் விரும்பவில்லை.
பின்னர் அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதியாகி அறிவிப்பும் வெளியானது. இதனால் படு அப்செட் ஆனார் துரைமுருகன்.
தற்போது தம்மை சந்திப்பவர்களிடம், நானும் ஜெகத்ரட்சகனும் தைலாபுரம் தோட்டத்துக்கு போய் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் பாமக நம்ம கூட வந்திருக்கும். ஆனால் அவங்களே பேசி முடிக்கிறம் சொல்லி இப்ப என்னாயிருக்குன்னு பாருங்க.... என கடுப்பில் பேசி வருகிறாராம்.