தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. இப்பொதுத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
பிளஸ் டூ பொதுத்தேர்வுக்காக 2,944 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 44,400 ஆசிரியர்கள் இம்மையங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
தேர்வு மையங்களைப் பார்வையிட 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இத்தேர்வுகள் மார்ச் 19-ந் தேதி வரை நடைபெறும்.
பொது தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு இனி துணைத் தேர்வுகள் இல்லை
5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூடாது: வைகோ வலியுறுத்தல்
ஆசிரியர்கள் வராததால் மாணவர்களுக்கு பாடம் நடத்திய எம்.எல். ஏ!