பொது தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு இனி துணைத் தேர்வுகள் இல்லை

Students who fail in the public exam are no longer eligible to write reexams

by Isaivaani, Nov 17, 2018, 09:26 AM IST

10ம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 வகுப்புக்கான பொது தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக வைக்கப்படும் துணைத் தேர்வுகள் இனி நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் 10ம் வகுப்பு, 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் துணைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த துணைத் தேர்வுக்கு வரும் கல்வியாண்டு முதல் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

வரும் 2019-20ம் கல்வி ஆண்டு முதல் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வும், தொடர்ந்து ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படுவதாக கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், 10ம் வகுப்பு, 11ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்காக செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் துணைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும் பொதுத் தேர்வில் பள்ளிகள் மூலமகவும், தனித் தேர்வர்களாகவும் தேர்வு எழுதி தேர்ச்சி அடையாதவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. இதன் பிறகு எந்த துணைத் தேர்வுகளும் நடத்தப்படாது.

இதனால், மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் ஜூன், ஜூலையில் நடைபெறும் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading பொது தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு இனி துணைத் தேர்வுகள் இல்லை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை