4 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியால் சர்ச்சை

Controversy Thuthukudi NTPL

Mar 4, 2019, 05:15 AM IST

தூத்துக்குடியில் 4 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையத்தை புதியதாக நாட்டுக்கு அர்ப்பணிக்க இருப்பது சர்ச்சையானதால் அந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை.

தூத்துக்குடியில் நெய்வேலி தமிழ்நாடு மின் உற்பத்தி நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மின்துறை அமைச்சர் ப்யூஸ் கோயல் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற இருந்தது.

இந்த அனல் மின்நிலையமானது 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2008ம் ஆண்டு திமுக கொண்டு வந்தத திட்டம் இது.

ஆனால் திடீரென இந்த திட்டத்தை புதிதாக நாட்டுக்கு அர்ப்பணிப்பது ஏன்? என்பது சர்ச்சையானது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை.

You'r reading 4 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியால் சர்ச்சை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை