தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல்18-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் வரும் 19-ந் தேதி தொடங்குகிறது.
நாடு முழுவதும் தேர்தல் திருவிழாவுக்கான நாட்களை அறிவித்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம். டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையாளர்கள் 17-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகளை அறிவித்தனர்.
நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் ஏப்ரல் 11-ந் தேதி முதல் மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தல் அட்டவணை விபரம்:
வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பம்: மார்ச் 19
வேட்பு மனு செய்ய கடைசி நாள் : மார்ச் 26
வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 27
வேட்பு மனு வாபஸ்: மார்ச் 28, 29
இறுதி வேட்பாளர் பட்டியல் : மார்ச் 29 மாலை 3 மணி
வாக்குப்பதிவு: ஏப்ரல் 18
வாக்கு எண்ணிக்கை: மே 23
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்தார்