சென்னை: சென்னை கடற்கரை-ராயபுரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் இன்றும் நாளையும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடம்பத்தூரில் இருந்து பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வழியாக வேளச்சேரிக்கு செல்லும் மின்சார ரயில் மூர்மார்க்கெட் ரயில் நிலையம் வரை செல்லும். வேளச்சேரியில் இருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்பட்டு, கடற்கரை வழியாக திருத்தணிக்கு செல்லும் மின்சார ரயில் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 12.15 மணிக்கு புறப்படும்.
இதேபோல், வேளச்சேரியில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு, கடற்கரை வழியாக அரக்கோணத்திற்கு செல்லும் மின்சார ரயில் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும்.
வேளச்சேரியில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு, கடற்கரை வழியாக சூலூர்பேட்டைக்கு செல்லும் மின்சார ரெயில் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும்.
திருவள்ளூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு கடற்கரை வழியாக வேளச்சேரிக்கு செல்லும் மின்சார ரெயில் ஆவடி- வேளச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வேளச்சேரியில் இருந்து மதியம் 1.50 மணிக்கு கடற்கரை வழியாக பட்டாபிராமிற்கு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-பட்டாபிராம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வேளச்சேரியில் இருந்து ஆவடிக்கு காலை 11.10 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வழியாக திருவள்ளூருக்கு மதியம் 1.05 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
ஆவடியில் இருந்து கடற்கரை வழியாக பிற்பகல் 12.10 மணிக்கு வேளச்சேரிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப் படுகிறது.
திருவள்ளூரில் இருந்து மதியம் 2.40 மணிக்கு மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்திற்கு புறப்பட மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.