"ஆடம்பர ஆசையால் விபச்சாரம்" - திசை மாறும் கல்லூரி மாணவிகள்

பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் திருச்சியில் ஏழைப் பெண்களைக் குறி வைத்து பாலியல் கொடூரங்கள் நடைபெற்று வருகின்றன.

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள பாலியல் சம்பவங்களால் பெண்கள் சமுதாயத்தில் இழிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர் .இந்நிலையில் திருச்சியில் ஏழைப் பெண்களைக் குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் விபச்சாரக் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துள்ளன . இவர்கள் காவல்துறைக்குச் சந்தேகம் வராத நிலையில் சமூக வலைத்தளமான வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் இக்கும்பல் இளம் பெண்களின் ஆசையை தூண்டி விபச்சார தொழிலில் ஈடுபடுத்துகின்றனர் . எந்த சந்தேகமும் வராமல் இப்பெண்களுக்குப் பணப்பரிமாற்றம் `ஸ்வைப் மெஷின்' மூலம் நடைபெறுவதால் காவல்துறை திகைத்துள்ளனர்.

பின்னர் இது பற்றி திருச்சியில் உள்ள சிலரிடம் கேட்ட போது ``ஒருகாலத்தில் திருச்சி ஜங்ஷன், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில்தான் விபசாரத் தொழில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்தது. பின்னர் அக்கும்பல், பங்களா வீடுகளை வாடகைக்கு எடுத்து, வெளிமாநிலங்களைச் சேர்ந்த பெண்களை அழைத்து வந்து தொழில் செய்து வந்ததாகவும் கூறினர் .இது பற்றிய தகவல்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்குத் தெரிய வந்ததும் காவல் துறையில் தெரிவித்தனர். காவல் துறையினரும் சம்மந்தப்பட்ட பகுதிகளில் 'ரெய்டு' சென்று, அக்கும்பலைக் கட்டுப்படுத்தி வந்தனர். பின்னர் இச்சம்பவத்தைக் காவல் துறை கண்டு கொள்ளாததால் அக்கும்பலின் விபசாரம் இரவு நேரங்களில் திருச்சி காவிரிப் பாலம், கரூர் பைபாஸ் சாலை, குட்ஷெட் உள்ளிட்ட மறைவான பகுதிகளில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இக்கும்பல் இளைஞர்களை நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் வளைத்து,மிகவும் நம்பிக்கையானவர்களை வைத்துக் காய் நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன .வாட்ஸ்அப் மூலம் அழகான பெண்களின் புகைப்படங்களை இளைஞர்களுக்கு அனுப்பி , பிடித்த பெண்களைத் தேர்வு செய்யச் சொல்கிறார்கள். இரண்டு மணி நேரம் முதல் 12 மணி நேரம்வரை பல்வேறு விதங்களில் அவர்களுக்கான தொகை வசூலிக்கப்படுவதாகவும் ,அவர்களுக்கான பணத்தை 'ஸ்வைப் மெஷின்' மூலமாகப் பெற்றுக் கொள்கின்றனர்.

இதில் மேலும் ஒரு திடுக்கிடும் தகவலும் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது . விபச்சாரத்தில் ஈடுபடும் பெரும்பாலான பெண்கள் கல்லூரி மாணவிகள் என்பதுதான் கொடுமையான விஷயம். திருச்சியில் உள்ள பிரபல கல்லூரிகளுக்கு அருகிலும், பேருந்து நிலையங்களிலும் சுற்றும் புரோக்கர் கும்பல், பெண்களைக் கண்காணித்து ஏதோ ஒருவகையில் அறிமுகம் ஆவது போல் பேச்சுக் கொடுக்கிறார்கள். மாணவிகளிடம் ஆடம்பரமாக வாழலாம் என்று ஆசைவார்த்தைகளை கூறி ,அவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி வலையில் விழ வைக்கின்றனர் இக்கும்பல் . இங்கு நடைபெறும் விபசாரம் குறித்து அவ்வப்போது கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் குறிப்பிட்ட சிலர் மீது காவல் துறையினர் அவர்களை கை வைக்காமல் இருப்பதால், காவல் துறைக்குக் குறிப்பிட்ட தொகையை அவர்கள் கொடுப்பதாகவும் ,சிலர் கூறுகின்றனர் .

சமீபத்தில் கடலூர் அருகே ஒரு விபசாரக் கும்பல் சிக்கியது. அப்போது கைது செய்யப்பட்டவர்களில் கொல்கத்தா மற்றும் திருச்சியைச் சேர்ந்த பெண்களும் இருந்தார்களாம். இந்தக் கும்பல் திருச்சி மட்டுமல்லாமல் கடலூர், புதுச்சேரி போன்ற இடங்களில் உள்ள அப்பாவி ஏழைப் பெண்களைக் குறிவைத்து வலைவிரிக்கிறார்கள். இதனால், இளைஞர்கள் பலரும் சீரழிந்து வருகிறார்கள். இதைத் தடுக்காவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகும்” என எச்சரித்தனர்.

இச்சம்பவம் குறித்து திருச்சி மாநகரக் காவல் அதிகாரிகளிடம் கேட்டபோது,பொன்மலைப்பட்டி பகுதியில் வாடகை வீடு எடுத்து விபசாரம் நடத்திவந்த வேலூர் மாவட்டம் அணைக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை கைது செய்துள்ளோம். மேலும் அரவக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ், முசிறியை அடுத்த பாளப்படி லோகநாதன், மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த சுரேஷ், திருச்சி கல்லுக்குழியைச் சேர்ந்த கோபால், தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ், தென்னூர் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் ஆகியோரைக் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்து ஏழு பெண்களை மீட்டோம் ,எனக் கூறினார்கள் . மேலும் இதில் சம்மந்தப்பட்ட நபர்கள் தலைமறைவானதால், அவர்களைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் தெரிவித்தனர். பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் இச்சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்