தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு அரசியல் ஆசை துளிர்விடுவது இயல்பாக மாறிவிட்டது. எம்.ஜி.ஆர். தொட்டு கோவை சரளா வரை அதற்கு உதாரணம் சொல்லலாம். ஆனால் இதில் அஜித் மட்டும் விதி விலக்கு. அவருக்கும் அரசியல் ஆசை முதலில் இருந்தது தான். ஆனால் காலப்போக்கில் அரசியலால் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அவரின் நிலையை மாற்றியது. தமிழகத்தின் தற்போதைய நிலையை பயன்படுத்தி அரசியலில் காலூன்ற சில நட்சத்திரங்கள் முயன்று வருகின்றனர்.
இதில் எதிலும் ஆர்வம் இருந்து வருகிறார் அஜித். அதற்கு உதாரணம் தான் சமீபத்தில் அஜித்தை பற்றி பா.ஜ.க தலைவர் தமிழிசை பெருமையாக கூறி அவரது ரசிகர்கள் பாஜகவுக்கு உழைக்க வேண்டும் என கேட்டுகொண்டார். உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்து, 'எனக்கு அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்பதுபோல் அஜித் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என இயக்குனர் சுசீந்திரன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அதில், ''40 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.., உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இவரின் பதிவு வைரலாகி வருகிறது. அதேவேளையில் அஜித்தின் வழியே நாங்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றார்.