அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு.. பாமக, தேமுதிக திடீர் புறக்கணிப்பால் குழப்பமோ குழப்பம்

Advertisement

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பட்டியல் வெளியீட்டின் போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் யாரும் பங்கேற்காததால் கூட்டணியில் இன்னும் குழப்பம் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி கூட்டணிக் கட்சிகள் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தலைமையில் பெரும் இழுபறி, குழப்பங்களுக்கு இடையே மெகா கூட்டணி முடிவானது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 5, பாமகவுக்கு 7, தேமுதிக.வுக்கு 4, தமாகா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

இந்த கூட்டணியில், இடம் பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற தொகுதி ஒதுக்கீடு பட்டியலை கிரவுன் பிளாசா ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பட்டியலை வெளியிட்டனர்.

அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள் விபரம் தென் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,
திருவண்ணாமலை,சேலம்,நாமக்கல்ஈரோடு,திருப்பூர்,நீலகிரி,பொள்ளாச்சி,கிருஷ்ணகிரி,கரூர்,பெரம்பலூர்,சிதம்பரம்,நாகை,மயிலாடுதுறை,மதுரை,தேனி,நெல்லை,ஆரணி ஆகிய தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்: திண்டுக்கல்,மத்திய சென்னை,ஸ்ரீபெரும்புதூர்,அரக்கோணம்,தர்மபுரி,கடலூர்,விழுப்புரம் ஆகிய 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.பாஜக போட்டியிடும் தொகுதிகள்: கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் : வடசென்னை,கள்ளக்குறிச்சி,திருச்சி,விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஓதுக்கீடு.

புதிய தமிழகம் கட்சி: தென்காசி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதியும் புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதியும் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியும் ஒதுக்கப் பட்டுள்ளது.

தொகுதி ஒதுக்கீடு பட்டியல் அறிவிப்பு பட்டியல் வெளியிடப்பட்ட போது அதிமுக தலைவர்களுடன் பாஜக தரப்பில் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜக அகில இந்திய பொதுச் செயலாளர் எச்.ராஜா ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். பாமக, தேமுதிக தரப்பில் யாரும் பங்கேற்காதது கூட்டணியில் இன்னும் குழப்பம் நீடிப்பதையே அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளதால் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>