மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல்கள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு.
தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பாக நகர்கிறது. பிரதான கட்சிகளான அதிமுக, திமுக-வும் தங்களது வேட்பாளர்கள் பட்டியல்களை வெளியிட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக இன்று தங்களது வேட்பாளர்கள் பட்டியல்களை வெளியீடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்றுவரை நடைபெற்றது. இதனையடுத்து,கமல்ஹாசன் தலைமையிலான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் சென்னை, ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் 9 மணியளவில் தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு நாளை மறுநாள் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ராமநாதபுரத்தில் கமல் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.