பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்பா...?காங்கிரஸ் செயல் தலைவர் மயூராவுக்கு சம்மன்

Advertisement

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் சம்பந்தமாக தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை ஒரு கும்பல் பாலியல் கொடூரம் செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருவதாகக் கூறப்படும் இந்த பாலியல் கொடூரம், பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அம்பலத்துக்கு வந்தது. இதில் திருநாவுக்கரசு என்பவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டமும் பாய்ந்தது. ஆனால் இதில் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.

இதனால் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை சிபிசிஐடி தரப்பு காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியானதாக தெரிகிறது.

பொள்ளாச்சி பாலியல் குற்றம் நடந்த குறிப்பிட்ட நாளில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக உள்ள மயூரா ஜெயக்குமாரை சந்தித்ததாகவும் திருநாவுக்கரசு கூறியுள்ளான். அதன் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு வரும் 25-ந் தேதிக்குள் ஆஜராகுமாறு மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பாலியல் கொடுமையில் ஈடுபட்ட கும்பலுக்கும் மயூரா ஜெயக்குமாருக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வி எழுந்து பொள்ளாச்சி விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>