பாடியில் இன்று காலை தே.மு.தி.க. பிரமுகரை 6 பேர் கொண்ட கும்பல் சரிமாரி தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தே.மு.தி.க. பிரமுகரான பாண்டியன் (வயது 45) என்பவர் பாடியில் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் . இவர் பொறியாளர் பிரிவில் பதவியில் உள்ளார் .மேலும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார் . இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வில்லிவாக்கம், தி.நகர் தொகுதியில் இவர் போட்டியிட்டுள்ளார்.
இன்று காலை, அண்ணாநகரில் உள்ள பள்ளியில் படிக்கும் தனது மகனை புல்லட்டில் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் . பாடி, குமரன் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே சென்றுகொண்டிருந்த நிலையில், அந்த வழியாக வந்த 6 பேர் கொண்ட கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்து . அவர்களிடம் இருந்து தப்ப முயற்சித்தார் பாண்டியன் . எனினும் ,அந்த கும்பல் பாண்டியனை சுற்றி வளைத்து தலை, முகம்,கழுத்து போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டினர் . இதில் பாண்டியன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .
இச்சம்பம் குறித்து, அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பொற்கொடி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் . விசாரணையில், நேற்று பாண்டியனுக்கு மர்ம நபர்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர் எனவும், அவர்கள் பாண்டியனை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன .
மேலும், விசாரணையை தீவிரப்படுத்தி பாண்டியனின் செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கொலை நடந்த இடத்தில் உள்ள கேமராக்களை போட்டு பார்த்தும் சம்மந்தப்பட்ட கும்பலை கண்டுபிடித்து விடுவோம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .