இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 2000-ம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் புரோபேசனரி அதிகாரி (Probationary Officer) என்ற பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், மொத்தம் 2000-ம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளன.
ஊதியம்: தொடக்க ஊதியமாக ரூ.27,620 அதிகபட்ச ஊதியமாக ரூ.42,020 வழங்கப்படும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு விவரங்கள்:
முதல்நிலைத் தேர்வு (Preliminary), முதன்மைத் தேர்வு (Main), நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முதல்நிலைத் தேர்வு: ஜுன் 8, 9, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஆன்லைன் முதல்நிலை தேர்வுகள் நடைபெறும்.
முதன்மைத் தேர்வு: 20.7.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22-4-2019
ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 22-4-2019
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற தளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி. பொருளாதாரத்தில் பின்தங்கிய விண்ணப்பதாரர்கள் ரூ.750, எஸ்.சி., எஸ்டி., மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு: https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf