அடேங்கப்பா.. பிரதமரையே விமர்சிக்கும் அளவுக்கு பெரிய ஆள் ஆகிவிட்டார் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி கிண்டல்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, குமரியில் உள்ள தோவாளை தொகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது, பொதுமக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலின் எதை எதையோ போகிற போக்கில் பேசிவருகிறார். பிரதமர் மோடி குறித்தும், பல விமர்சனங்களை எடுத்து வைக்கிறார். பிரதமரை விமர்சித்து பேசும் அளவுக்கு ஸ்டாலின் பெரிய ஆள் ஆகிவிட்டார்” என கிண்டலடித்துள்ளார்.

மேலும், நாட்டிற்கு அடுத்ததாக யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும் என யோசித்து வாக்களியுங்கள். பிரதமர் மோடி, நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி நல்லாட்சி நடத்தி வருகிறார். எனது அருமை நண்பர் பொன்.ராதாகிருஷ்ணன் எப்போது, சென்னைக்கு வந்து என்னைப் பார்த்தாலும், குமரி மக்களின் நலன் குறித்தே பேசுவார்.

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருப்பவர். கடந்த மக்களவைத் தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணனை வெற்றிப் பெற வைத்து எம்.பி. ஆக்கிய உங்களின் பாசத்திற்கும் மதிப்பிற்கும் என்றும் கடமைப் பட்டவராக பொன்.ராதாகிருஷ்ணன் விளங்குகிறார். அவர் உங்களுக்கு செய்துள்ள நலத்திட்டங்கள் குறித்து உங்களுக்கே தெரியும். மீண்டும் அவரை வெற்றிப் பெற செய்யவேண்டும் என்றே கேட்டுக் கொள்கிறேன் என பொன்.ராதாகிருஷ்ணனுக்காக இரவு நேரம் என்றும் பாராமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

 

Advertisement
More Tamilnadu News
stalin-slams-central-and-state-governments-for-onion-price-hike
வெங்காயத்தால் ஆட்சியே போகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..
supreme-court-to-hear-on-dec11-a-fresh-plea-of-dmk-and-congress-against-local-body-election-notification
உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து திமுக, காங்கிரஸ் புதிய மனு.. சுப்ரீம் கோர்ட் டிச.11ல் விசாரணை
dhinakaran-registered-ammk-in-election-commission
அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு...
dmk-has-the-courage-to-face-local-body-elections-asks-edappadi-palanisamy
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா? முதலமைச்சர் சவால்..
state-election-commission-reannounced-local-body-poll-dates
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.27, 30ல் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு
dr-ramadoss-wrote-letter-to-minister-nitin-gadkari-to-take-action-on-toll-plaza
சுங்க கட்டணக் கொள்ளை.. கட்கரிக்கு ராமதாஸ் கடிதம்..
stalin-asks-edappadi-palanisamy-to-file-a-case-against-centre-to-get-gst-loss
தமிழ்நாட்டிற்கு எவ்வளவு ஜிஎஸ்டி இழப்பு பாக்கி? எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி.
onion-prices-rise-up-to-rs-200-in-koyambedu-market
சென்னையில் வெங்காயம் விலை ரூ.200ஐ எட்டியது.. பல்லாரி கிலோ ரூ.180..
sc-puts-on-hold-local-body-polls-in-9-newly-carved-out-tn
 9 மாவட்டம் தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்..  சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு.. 
supreme-court-allows-local-body-election-excluding-9-districts
9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்..
Tag Clouds