அரசியல் கட்சிகளின் பிரசாரம் குறித்து இயக்குநர் சேரன் வேதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தலும் நடக்கிறது. இதனால் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. வாக்குசேகரிப்பில் வேட்பாளர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். வீடுவீடாக சென்று பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். வாக்குப்பதிவு இன்னும் ஏழு நாட்களே உள்ளதால் இறுதிக்கட்ட பிரசார வேலைகளில் அரசியல் கட்சிகள் மும்மரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் குறித்து இயக்குநர் சேரன் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ``எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க.. யாரும் தீர்வை நோக்கி நகரவேயில்லை... ப்ரச்னைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம் தெளிவுபடுத்தவில்லை.. ஆனால் வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது அனைவரிடமும்.. யாரை நம்பி மாற்றம் தேடுவது... சாதாரண வாக்களனாய் எனக்கு தோன்றியது.
மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், தனித்து நிற்கும் கட்சிகளான மநீம, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களை கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுகிறார்கள்.. தொகுதியில் பங்களிக்கப்போவது வேட்பாளர்கள்தானே.." எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்