குடிகார்களின் தயவால் 3 நாட்களில், ரூ. 423 கோடிக்கு மது விற்பனை

by Subramanian, Apr 16, 2019, 16:49 PM IST
Share Tweet Whatsapp

கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையிலான 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.423 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை என்று முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் மது குடிப்பவர்கள் வேண்டிய சரக்கை முன்கூட்டியே வாங்கி இருப்பு வைக்க தொடங்கினர். ஆகையால் கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்தது.

இன்று முதல் தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் மதுக் கடைகள் விடுமுறை என்பதால் நேற்று, கூட்டம் அலைமோதியது.

கடை திறப்பதற்கு முன்பாகவே காத்திருந்து மது வகைகளை, கட்சியின் வாங்கிச் சென்றனர்.கடந்த மூன்று நாட்களில் மட்டும், சுமார் 423 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டார தகவல் தெரிவித்துள்ளன.

இதில், ஞாயிற்றுக்கிழமையன்று அதிகபட்சமாக, 165 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.கடந்த வெள்ளியன்று, 117 கோடி ரூபாய், சனிக்கிழமை அன்று 141 கோடி ரூபாய் என, விற்பனை 3 மடங்கு அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a reply