இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிர்களை இழந்தனர். இதற்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது. இந்த கொடூர தாக்குதலில் உண்டான சோகத்தில் இருந்து இலங்கை மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் இலங்கையில் நடந்தது போன்ற தாக்குதல் இந்தியாவில் நடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் தான் இந்த தாக்குதல் நடக்கும் என மர்ம நபர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பெங்களூரு போலீசாருக்கு ஓசூரில் இருந்த மர்ம காலில் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, மராட்டியம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில், முக்கியமான நகரங்களில் குண்டு வெடிக்கும் என்றும், இதற்காக ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் இதற்காக நுழைந்துள்ளார்கள் என்றும், குறிப்பாக தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அதில் பேசிய மர்ம ஆசாமி கூறியுள்ளான்.
இதையடுத்து தமிழகத்தில் முன்னெசரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பல ப்படுத்தபட்டுள்ளது. தமிழக ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், ரெயில்வே டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், சோதனை நடவடிக்கைகளும் நேற்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.