இந்திய அணிக்காக வெற்றி தேடி தர வேண்டும்... வேகப்பந்து வீச்சாளர் விருப்பம்...

இந்திய அணிக்காக வெற்றி தேடி தர வேண்டும் என்று இளம் வேகப்பந்து வீச்சாளர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இளம் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன். இவர் ஏற்கனவே இந்திய அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். கடைசியாக 2014-ல் இலங்கைக்கு எதிராக விளையாடினார். 150 கி. மீ வேகத்தில் பந்துவீசும் திறமை கொண்டவர். இலங்கைக்கு எதிரான போட்டிக்கு பிறகு மோசமான பார்ம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

இருப்பினும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இதற்கிடையே ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். தொடக்க பேட்ஸ்மேன்களான கிறிஸ் லின் (0), ஷுப்மான கில் (14) ஆகியோரை அவுட்டாக்கியதால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இது குறித்து பேசிய அவர், "‘எல்லாமே சிறப்பாக உள்ளது. நான் எப்போதுமே என் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த போட்டிக்கு முந்தைய போட்டியில் ஒரு ஓவர்தான் வீசினேன். அதில் நான் தவறு ஏதும் செய்ததாக உணரவில்லை. எப்போதுமே சிறந்ததாகவே உணர்கிறேன். நான் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன். இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதே எனது விருப்பம்" எனக் கூறியுள்ளார்.

Advertisement
More Sports News
dhoni-rishab-pant-comparison-is-a-worst-thing-says-yuvaraj-singh
தோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடக்கூடாது – யுவராஜ் சிங் நச்!
south-africa-won-the-3rd-t20-match-against-india
பெங்களூரில் டிகாக் தாண்டவம் – சமனில் முடிந்த டி-20 தொடர்!
kohli-beat-rohit-sharma-in-t20-top-scorer
டி-20 கிரிக்கெட்: ரோகித்தை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம்!
vineshphogat-selected-to-play-in-olympics
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் தங்கல் நாயகி!
ashes-test-cricket-ended-in-tie
ஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்!
dhoni-will-continue-as-csk-captain-next-ipl-also
அடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி!
stewsmith-breaks-world-record
இன்சமாம் உல் அக்கின் உலகசாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
india-pakistan-play-davis-cup-tennis-this-year-end
டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா!
fifa-u17-female-worldcup-held-next-year-in-india
இந்த வருஷம் இல்ல அடுத்த வருஷம் தான் ரியல் பிகில் ஆரம்பம்!
david-warner-poor-play-in-ashes-test
இந்தியாவில் அசத்திய வார்னருக்கு இங்கிலாந்தில் இப்படியொரு கதியா?
Tag Clouds