கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்

admk announced cash prize for gomathi marimuthu

by Suganya P, Apr 30, 2019, 00:00 AM IST

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இணைந்து வழங்கினர்.

கத்தார்  தலைநகர் தோகாவில் 23 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து முதல் இடம் பிடித்து, இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்று சாதனை படைத்தார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கோமதி சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற கோமதிக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்குவதாகத் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனிடையில், தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில், அதிமுக சார்பாக கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் பல்வேறு வகைகளில் உதவிகளைச் செய்து, அவர்கள் உற்சாகத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களைப்பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திட வழிவகை செய்து தந்துள்ளார்.

அந்த வகையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அதிமுக சார்பில் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று கோமதி மாரிமுத்து அவர்களுக்கு ரூ.15 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.  மேலும் இவர்களின் சாDashboardதனைகள் மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, அதிமுக சார்பில் ரூ 15 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து வழங்கினர். 

முன்னதாக, தங்கம் வென்று சாதனை படைத்த கோமதிக்கு உரிய அங்கிகாரம் தமிழக அரசு அளிக்கவில்லை என்ற புகார்கள் பல தரப்பிலும் இருந்து எழுந்தன. இந்த நிலையில், அதிமுக தற்போது கோமதிக்கு பரிசு அறிவித்துள்ளது.

இந்த பெண்ணின் வெற்றி கதை நமக்கு ஒரு பாடம் – ஹர்பஜன் சிங் ட்வீட்!

You'r reading கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை