இது எந்த பின்புலமா இருக்கும்? அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்!

O Paneerselvam tweet his wishes to Ajith Kumar Birthday

by Mari S, May 1, 2019, 13:56 PM IST

நடிகர் அஜித்தின் 48வது பிறந்த நாளை அவரது ரசிகர்களும் திரை பிரபலங்களும் நள்ளிரவு முதலே சமூக வலை தளங்களில் ஹேஷ்டேகுகளை தெறிக்கவிட்டு ட்ரெண்டாக்கி தங்களின் கொண்டாட்டத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில்

”எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்”

என நடிகர் அஜித்துக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர் தினத்துக்கு வாழ்த்துகள் சொல்லாமல் நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்வதில் என்ன பின்புலம் இருக்கிறது என சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், சில பேர் அஜித் ரசிகர்களின் ஆதரவை அதிமுக பெறவே இவ்வாறு ஓபிஎஸ் வாழ்த்து சொல்கிறார் எனவும் கவுண்ட்டர் கொடுத்து வருகின்றனர்.

அவர் நல்லவர் இல்லை...பதில் கூறமாட்டேன்! –தங்க தமிழ்செல்வனை விளாசிய ஓபிஎஸ்

You'r reading இது எந்த பின்புலமா இருக்கும்? அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை