சாகித்ய அகாடமி விருது பெற்றவர்...! பிரபல எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்!

Famous Tamil poet and writer, sahitya award winner thoppil Mohammed meeran passed away:

by Nagaraj, May 10, 2019, 09:55 AM IST

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதியான தேங்காய்பட்டினம் என்ற சிறு ஊரில் 1944-ம் ஆண்டு பிறந்தவர் தோப்பில் முகம்மது மீரான். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் புதினங்கள் மற்றும் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.

சாய்வு நாற்காலி என்ற பெயரில் தோப்பில் முகம்மது மீரான் எழுதிய நாவலுக்கு 1997-ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், ஆகியவை அவரின் பெயர் சொல்லும் புதினங்களாகும்.

74 வயதாகும் மீரான் நெல்லையில் வசித்து வந்த நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோப்பில் முகம்மது மீரான் மறைவுக்கு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராஜீவ் ஊழல்வாதியா? - மோடி கூறியது அதிர்ச்சி..! ராகுலின் 'நறுக்' பதில் ஓ.கே..! மகாத்மாவின் பேரன் கருத்து!

You'r reading சாகித்ய அகாடமி விருது பெற்றவர்...! பிரபல எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை