ஜப்பானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி மக்கள் பீதிக்கு ஆளாகினர்.
அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் தென்கிழக்கே கடலோரப் பகுதியான மியாசக்கி ஷூகி என்ற இடத்தை மையமாக கொண்டு கடலுக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் முதலாவது நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவானது.
முதலாவது நில நடுக்கம் ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதே இடத்தில் கடலுக்கு அடியில் 44 கி.மீ. ஆழத்தில் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவான
இந்த நிலநடுக்கம் காரணமாக அப் பகுதியில் கடற்கரையோர நகரங்களில் கட்டங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறினர்.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று காலை உள்ளூர் நேரப்படி, 8.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 20 சதவீத நிலநடுக்கங்கள் ஜப்பானில் நிகழ்கின்றன.