அப்பப்பா.... எவ்ளோ குழப்பம்! ஜீவாவுக்கும் அதர்வாவுக்கும் கிரீன் சிக்னல்.. பாவம்.. ஜெய், விஷாலுக்கு மட்டும் ரெட் சிக்னல்

Advertisement

இந்த வாரம் பட வெளியீட்டில் ஏற்பட்ட குழறுபிடியால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சரி, இந்த வீக்கெண்டுக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ் என ஒரு டீடெயில் ரிப்போர்ட்.

அயோக்யா

 

வெளியாகாத படம்:

இந்த வார ரிலீஸிலிருந்து தள்ளிப்போயிருக்கும் படம் விஷாலின் அயோக்யா. வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன் நடிப்பில் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த அயோக்யா எதிர்பாராத சில காரணத்தால் ரிலீஸாக முடியவில்லை. அதனால் தள்ளிப்போகிறது. இதற்கு காரணம் என்னவென்று விசாரித்தால், டெம்பர் படத்தின் ரீமேக் தான் அயோக்யா. டெம்பர் பட அனைத்து மொழி உரிமையை இந்தி தயாரிப்பாளர் ஒருவருக்கு விற்றுள்ளனர். அவர் தான் டெம்பர் இந்தி ரீமேக்கான சிம்பா படத்தை எடுத்தவர். இந்நிலையில் தமிழுக்கு தனியாக உரிமையை விற்கப்பட்டுள்ளது. இதை அறிந்த இந்தி தயாரிப்பாளர் என்னிடம் தான் அனைத்து மொழி உரிமையும் இருக்கிறது ஆக, எனக்கு 3 கோடி கொடுத்தால் மட்டுமே ரிலீஸ் செய்யமுடியும் என்று தடை வாங்கியிருக்கிறார். இதனால் தயாரிப்பு தரப்பு பொருளாதார சிக்கலில் இருக்கிறது.

நீயா 2

பின் வாங்கிய இச்சாதாரி பாம்பு:

ஜெய், வரலெட்சுமி, ராய்லெட்சுமி, கேத்ரின் தெரஸா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான நீயா2 படமும் இன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100, ஜீவாவின் கீ படங்கள் வெளியாவதால் திரையரங்கம் கிடைப்பதிலும், வசூலிலும் சிக்கல் ஏற்படும் என நீயா 2 பின்வாங்கியது. எந்த போட்டியின்றி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறது படகுழு. நகைச்சுவை என்னவென்றால், விஷாலைப் பார்த்து பின்வாங்கியது நீயா 2. ஆனால் விஷாலின் படமே வெளியாக முடியவில்லை.

100

சிக்கலை உடைத்தெறிந்த 100:

அடுத்து, மே 9ஆம் தேதியான நேற்று அதர்வா நடிப்பில் 100 படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் பொருளாதார சிக்கலால் அப்படமும் வெளியாக முடியவில்லை. படத்தை வெளியிடுவதில் தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. ஆனால், 100 படத்துக்கு இருந்த தடையை நீதிபதி நீக்கி உத்தரவிட்டதால், இன்று வெளியாகும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று காலை காட்சி இரத்தாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அக, 100 படம் வெளியாகுமா, வெளியாகாதா என்பது சிக்கலாகவே இருக்கிறது.

ஜீவா

இன்று வெளியாகும் படங்கள்:

ஜீவாவின் கீ படம் வெளியாவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. தவிர பேரழகில் ஐஎஸ்ஓ, உண்மையின் வெளிச்சம் 3டி, காதல் முன்னேற்ற கழகம் மற்றும் வேதமானவன் உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகிறது. இந்தியில் டைகர் ஷரஃப் நடிப்பில் ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 ’ படம் வெளியாகிறது. அதுபோல மகேஷ்பாபு நடிப்பில் நேற்றே வெளியாகிவிட்ட மகரிஷி படங்களை பார்த்து மகிழலாம். இறுதியாக, 90's கிட்ஸின் ஃபேவரைட் போக்கிமான்கள் தான். அதை மையமாக கொண்டு "POKÉMON Detective Pikachu" படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

இந்த வீக் எண்டில் மட்டும் 7 செம படங்கள் ரிலீஸ்... சினிமா ரசிகர்களுக்கு செம வேட்டை

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>