இந்த வார இறுதியான மே 10ஆம் தேதியை குறிவைத்து ஏழு படங்கள் வெளியாக உள்ளன. அது குறித்த சின்ன ரிப்போர்ட் இதோ!
பொதுவாக கோடை விடுமுறை மாதமான மே-யில் எக்கச்சக்க படங்கள் போட்டிப் போட்டு வெளியாகும். இந்த வாரத்துக்கான ரிலீஸ் பட்டியலில் ஏழு படங்கள் இடம்பிடித்துள்ளன. இதில் பெரிய பட்ஜெட் படங்கள் மூன்றும், சின்ன பட்ஜெட் படங்கள் நான்கும் வெளியாகிறது.
அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் 100 திரைப்படமும் மே 9ஆம் தேதியே வெளியாகிறது. மீதமுள்ள படங்கள் மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாவது குறிப்பிடத்தக்கது. அதர்வா, ஹன்சிகா நடித்துக்கும் இந்தப் படத்தை சாம் ஆண்டன் இயக்கியிருக்கிறார். இதில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
விஷால் நடிப்பில் வெங்கட்மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அயோக்யா. தெலுக்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் இது. விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். வில்லன் ரோலில் பார்த்திபன் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
படம் தயாராகி ஒரு வருடத்துக்கும் மேலாக ரிலீஸாகாமல் இருந்த ஜீவாவின் கீ படம் இந்த வாரம் வெளியாகிறது. ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காலீஸ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த மூன்று படங்கள் மட்டுமின்றி, பேரழகில் ஐஎஸ்ஓ, உண்மையின் வெளிச்சம் 3டி, காதல் முன்னேற்ற கழகம் மற்றும் வேதமானவன் உள்ளிட்ட படங்களும் வெளியாகவுள்ளன. மே 10 ரேஸில் இருந்து நீயா 2 திரைப்படம் பின்வாங்கியுள்ளது. மே 24ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வீக் எண்டில் மட்டும் 7 செம படங்கள் ரிலீஸ்... சினிமா ரசிகர்களுக்கு செம வேட்டை
Advertisement