அயோக்யா இன்று ரிலீஸ் இல்லை.. மனமுடைந்து போன விஷால்

Advertisement

விஷால் நடிப்பில் இன்று வெளியாக இருந்த அயோக்யா திரைப்படம் வெளியாகவில்லை.

அயோக்யா

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயோக்யா. நாயகியாக ராஷி கண்ணா, வில்லனாக பார்த்திபன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, பூஜா தேவரியா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த அயோக்யா. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் யு/ஏ சான்றிதழுடன் மே 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

அயோக்யா

இன்று வெளியாக இருந்த நிலையில் அதிகாலை காட்சிக்காக ரசிகர்கள் திரையரங்கம் முன்பு குவிந்திருந்தனர். விஷாலுக்கு கட் அவுட், பேனர்கள் என ரசிகர்கள் அதகளப் படுத்திவந்தனர். நேற்றே இணையத்தில் புக் செய்துவிட்டு காலை வந்தவர்களும், டிக்கெட் வாங்க தியேட்டரை சூழ்ந்திருந்தவர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இன்று அயோக்யா வெளியாகவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

அயோக்யா படத்தின் பி.ஆர்.ஓ. ஜான்சனும் இன்று படம் வெளியாகவில்லை என்கிற தகவலை ட்விட்டியிருந்தார். அதுபோல விஷாலும் தன்னுடைய ட்விட்டரில்,“ என்னுடைய கடின உழைப்பின் பயனாக வெளியாக இருந்த படம் அயோக்யா. என்னுடைய முழுமையான உழைப்பையும் இதில் போட்டிருக்கிறேன். கஜினி முகமது போல நான் காத்திருப்பேன். எனக்கான நேரம் வரும். அதுவரை என்னுடைய வேலையை சிறப்பாக செய்துவருவேன்” என்று தெரிவித்துள்ளார் விஷால்.

நேற்றைய தினமான மே 9ஆம் தேதி வெளியாக இருந்த அதர்வாவின் 100 படமும் இறுதி நேரத்தில் வெளியானது. அதுபோல இன்று அயோக்யா படமும் வெளியாகாமல் போயிருக்கிறது. கடைசி நேரத்தில் இப்படியாகும் நிலை எப்பொழுது மாறுமோ?

மிஸ்டர் லோக்கலுடன் மோதல் இல்லையா? மீண்டும் தள்ளிப் போகிறதா விஜய்சேதுபதி படம்?

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>