விஜய்சேதுபதியின் சிந்துபாத் படம் மீண்டும் தள்ளிப் போகும் வாய்ப்புள்ளதால், இந்த மாதம் விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் மோதும் வாய்ப்பு குறைந்துள்ளது.
இந்த மாதம் மீண்டும் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள் மோதும் என்று நிலவிய எதிர்பார்ப்பு தற்போது டவுட் நிலைக்கு வந்து விட்டது. மே 1 தேதி சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, பின்னர் மே 17ம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டது. மே 16ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள சிந்துபாத் படம் தற்போது ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கோலிவுட்டின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ரஜினி – கமல், விஜய் – அஜித் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதி படங்கள் ஒரே சமயத்தில் மோதும் போது பாக்ஸ் ஆபிஸ் கிளாஷ் ஏற்படுகின்றது.
கடைசியாக விஜய்சேதுபதியின் சீதக்காதி மற்றும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா படங்கள் மோதின. அந்த ரேஸில் கனா படம் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதி மோதும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது, விஜய்சேதுபதியின் சிந்துபாத் படம் அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன் மோதல் இப்போதைக்கு இல்லை.
ஆனால், மே 9ம் தேதி அதர்வாவின் 100 படமும் மே 10ம் தேதி விஷாலின் அயோக்யா படமும் ரிலீசாகின்றன. இரண்டு படத்திலும் நாயகன் போலீஸ் என்பதால், ஒரு சின்ன கிளாஷ் நிலவும், ஆனால், அயோக்யா படம் அடுத்த மே 17ம் தேதி ரிலீஸாகவுள்ள மிஸ்டர் லோக்கல் படத்திற்கு எந்த அளவுக்கு போட்டியாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும், எஸ்.ஜே. சூர்யாவின் மான்ஸ்டர் திரைப்படமும் மே 17ம் தேதி வெளியாகவுள்ளதால், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது.