விஷூவல் எபெக்ட்ஸ் உடன் வெளியாகும் ஆயிரத்தில் ஒருவன் 2 , புதுப்பேட்டை 2 ... உற்சாகத்தில் செல்வராகவன்

by Sakthi, May 6, 2019, 15:54 PM IST
Share Tweet Whatsapp

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை படங்களின் இரண்டாம் பாகங்கள் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் செல்வராகவன்.

செல்வராகவன்


செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் என்.ஜி.கே. நிகழ்கால அரசியலை பேசும் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு. படத்தில் சூர்யாவுக்கு இரண்டு நாயகிகள். இதில் யார் சூர்யாவுக்கு ஜோடி என்று ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வந்தனர். இந்நிலையில் படத்தில் சூர்யாவுக்கு மனைவியாக சாய் பல்லவி நடிக்கிறார். மற்றொரு நாயகியான ரகுல் ப்ரீத் சிங் வித்தியாசமான ரோலில் நடிக்கிறார். சூர்யா அரசியலுக்கு நுழையும் காட்சியில் ரகுல் வருகிறாராம்.


புதுப்பேட்டை இரண்டாம் பாகம் குறித்து சமீபத்திய பேட்டியில் செல்வராகவனிடம் கேட்டபோது, தனுஷிடம் புதுப்பேட்டை 2 குறித்து பேசிவிட்டதாகவும், விரைவில் படம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். தவிர, ஆயிரத்தில் ஒருவன் 2 படத்துக்கான விஷூவல் எபெக்ட்ஸ் சிறப்பாக வரவேண்டும் என்பதால் தாமதமாகலாம். ஆனால் சிறப்பான தொழில்நுட்ப உதவியுடன் படத்தை தயார் செய்யவிருப்பதாகவும் கூறினார்.
செல்வராகவனுக்கு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி படங்கள் ரிலீஸாகாமல் வெயிட்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ஆற்றுக்குள் பாய்ந்த விமானம் ...! 142 பேர் உயிர் தப்பிய அதிசயம்!


Leave a reply