`புதுப்பேட்டை 2 - கதை எழுதும் பணியில் செல்வராகவன் மும்முரம்

தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் தற்பொழுது துவங்கியுள்ளது. 
 
தனுஷ்
 
2006ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘புதுப்பேட்டை’. தனுஷூக்கு ஜோடியாக சினேகா, சோனியா அகர்வால் இருவரும் நடித்திருந்தார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.  வித்தியாசமான கதைக்களத்துடன் கேங்ஸ்டர் த்ரில்லராக உருவான இந்தப் படம் டிரெண்ட் செட்டிங் மூவி என்றே சொல்லலாம். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும், காட்சிகளும் இன்றுவரையிலும் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
 
தனுஷின் ஆக்ரோஷ நடிப்பு இந்த படத்தில் தான் முழுமையாக வெளிப்பட்டது. பல வருடங்களாகவே புதுப்பேட்டை 2 பற்றி இயக்குநர் செல்வராகவனிடம் ரசிகர்களும், திரைத்துறையினரும் இணையத்திலும், நேரிலும் கேட்டுவந்தனர். இந்நிலையில் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளை தொடங்கிவிட்டார் செல்வராகவன். தற்போது புதுப்பேட்டை 2 விற்கான திரைக்கதை எழுதும் பணிகளில் மும்முரமாக இருக்கிறாராம். விரைவிலேயே புதுப்பேட்டை 2 அறிவிப்பை எதிர்பார்க்கலாம். 
 
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த எனைநோக்கி பாயும் தோட்டா திரைப்படம் ரிலீஸூக்கு ரெடியாகிவிட்டது. தவிர, வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இந்த படம் மட்டுமின்றி துரைசெந்தில் குமார் இயக்கத்திலும் நடிக்க தயாராகிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
More Cinema News
raghava-lawrence-meets-kamal-haasan-after-darbar-audio-function
கமல் போஸ்டரில் சாணி அடித்த நடிகர்.. கமலுடன் திடீர் சந்திப்பு..
aishwarya-lekshmi-learns-to-drive-a-boat-for-mani-ratnams
படகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..
kamalhaasans-papanasam-to-be-remade-in-chinese
சீன மொழியில்  ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா?
vijay-sethupathis-story-on-farmers
கடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..
archana-kalpathis-announcement-on-50th-day-of-bigil
பிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..
kajal-aggarwal-to-marry-a-businessman-soon
காஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..
did-raghava-lawrence-refuse-to-work-with-kamal-haasan
கமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..
actress-indhuja-enjoys-rajini-film-baasha
முக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..
thalapathy-64-song-update-anirudh-reply-to-his-fan
தளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..
akshay-kumar-gifts-onion-earrings-to-twinkle-khanna
ரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..
Tag Clouds