என் சக்சஸ்க்கு காரணம் அஜித் சார் கொடுத்த டிப்ஸ் தான் – மெய்சிலிர்க்கும் காஞ்சனா பட நடிகர்!

Ajith advised me to get stunt training actor Sampath Ram

by Mari S, May 6, 2019, 16:57 PM IST

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக நடித்து வரும் ஸ்டண்ட் நடிகர் சம்பத் குமார், தான் இந்த அளவுக்கு சினிமாவில் வளர்ச்சியடைய அஜித் சார் சொன்ன அந்த டிப்ஸ் தான் காரணம் என மனம் திறந்துள்ளார்.

காஞ்சனா 3 படத்தில் அகோரியாக நடித்திருக்கும் சம்பத் ராம் நாம் பல படங்களில் பல கதாபாத்திரங்களில் பார்த்திருப்போம். ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்தில் சாதாரண சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமான சம்பத் குமார், பின்னர், தனது முயற்சியால் பல படங்களில் வில்லன் நடிகராக வலம் வந்து, மெயின் ரோல்களிலும் நடித்து வருகிறார்.

அஜித்துடன் தீனா படம் பண்ணும் போது, சண்டைக் காட்சி ஒன்றில், இவருடைய மார்பில் அஜித் குத்துவிட, கீழே பொத்தென்று விழுந்துவிட்டாராம். அப்போது, உடனடியாக இவரை தூக்கி நிறுத்திய அஜித், ஸ்டண்ட் பயிற்சிகளை கற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் அடிபடாமல் எப்படி நடிப்பது என்பதை கற்றுக் கொள்ள முடியும் என்ற டிப்ஸை இவருக்கு வழங்கியுள்ளார்.

அதன் பின்னர், தான் துணை நடிகனாக இருந்த தான் கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி தற்போது ஒரு நிலைமையில் இருப்பதாக சம்பத் ராம் கூறியுள்ளார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் காடன் படத்திலும் முக்கிய ரோலில் சம்பத் ராம் நடித்து வருகிறார். காடன் படத்தின் சண்டைக் காட்சியில் பலமாக அடிப்பட்டதால் ஒரு வாரத்திற்கும் மேலாக ஓய்வில் இருக்கும் சம்பத் ராம், தீனா பட ஷூட்டிங்கில் தனக்கு அடிபட்டதையும் அஜித் சொன்ன அட்வைஸையும் இன்றளவும் நினைத்து பார்த்து பகிர்ந்துள்ளார்.

தல, தளபதியுடன் நடிக்கணும் – இது சூப்பர் குளோப் அழகியின் ஆசை!

You'r reading என் சக்சஸ்க்கு காரணம் அஜித் சார் கொடுத்த டிப்ஸ் தான் – மெய்சிலிர்க்கும் காஞ்சனா பட நடிகர்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை