மான்ஸ்டர் படத்தில் எலி மட்டுமில்ல.. மானும் நடிச்சிருக்காம் – ரகசியத்தை ரிவீல் செய்த எஸ்.ஜே. சூர்யா!

Monster movie first single released by anirudh

by Mari S, May 6, 2019, 18:40 PM IST

ஒருநாள் கூத்து பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள மான்ஸ்டர் படம் வரும் மே17ம் தேதி வெளியாகிறது.

மான்ஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 8ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அந்திமாலை நேரம் பட பாடலை தற்போது இசையமைப்பாளர் அனிருத் சமூக வலைதளத்தில் ரிலீஸ் செய்தார்.

இதுகுறித்த நன்றியை தெரிவித்த எஸ்.ஜே.சூர்யா, இந்த படத்துல எலி மட்டுமில்லங்க.. மான் கூட இருக்கு.. அதுவும் மேயாத மான் என நடிகை பிரியா பவானி சங்கர் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள அந்திமாலை நேரம் பாடலில் பிரியா பவானி சங்கர் தரும் குட்டி குட்டி க்யூட் ரியாக்‌ஷன்களும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறது.

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கருக்கு இந்த படம் நிச்சயம் ஒரு நல்ல ஸ்கோப்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading மான்ஸ்டர் படத்தில் எலி மட்டுமில்ல.. மானும் நடிச்சிருக்காம் – ரகசியத்தை ரிவீல் செய்த எஸ்.ஜே. சூர்யா! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை