மாநகராட்சி நோட்டீஸ் .! வாடகை வீட்டை காலி செய்த நல்லகண்ணு!

பெயருக்கு ஏற்றாற்போல் நேர்மைக்குப் பெயர் போன இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணு, சென்னை மாநகராட்சி காலி செய்யச் சொன்னதால் 12 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்த அரசுக் குடியிருப்பு வீட்டை காலி செய்து தனியார் வீட்டில் குடியேறினார்.

தமிழகத்தில் இன்று உள்ள அரசியல்வாதிகளில் அப்பழுக்கற்றவராகவும், எளிமையாகவும் உள்ள ஒரே தலைவர் இரா.நல்லகண்ணு என்று சொன்னால் மிகையாகாது. வாழும் காமராஜர் என்று சொல்லுமளவுக்கு 94 வயதிலும் துடிப்போடு பொது வாழ்க்கையில் பயணித்து வருகிறார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான நல்லகண்ணு, எவ்வளவோ பதவி, சுகங்களை கட்சி சார்பில் வாரி வழங்கினாலும் அதனை மீண்டும் கட்சிக்கே அர்ப்பணித்துவிட்டு எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார். அதற்கு உதாரணமாக கடந்த 12 வருடமாக சென்னை தி.நகரில் உள்ள சாதாரணமான அரசு குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் அவர் வசித்து வந்ததைக் கூறலாம். அந்த வீட்டை அரசு இவருக்கு இலவசமாகவே கொடுத்திருந்தாலும், மற்றவர்களைப் போல் மாதந்தோறும் வாடகை செலுத்தி வந்த நேர்மையாளர் தான் நல்லகண்ணு.

இந்நிலையில் நல்லகண்ணு வசிக்கும் குடியிருப்பு உள்ள இடத்தில் புதிய கட்டடம் வருவதால் அங்கு வசிப்பவர்களை வேறு இடத்துக்கு இடம் மாறக்கோரி மாநகராட்சி தரப்பிலிருந்து நோட்டீஸ் தரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நல்லகண்ணு, மற்ற குடியிருப்பு வாசிகளை போல தானும் அரசு குடியிருப்பு வாடகை வீட்டிலிருந்து வெளியேறினார். தற்போது அவர் சென்னை கே.கே.நகர் பகுதியில் தனியார் வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளார்.

0மாநகராட்சியின் வேண்டுகோளை ஏற்று, நேர்மையுடன் அரசு வீட்டை காலி செய்த
நல்லகண்ணுவுக்கு வேறு இடத்தில் தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தி.நகர் வீட்டில் வசித்து வந்த போது கடந்த வருடம் தான் நல்லகண்ணுவின் மனைவி காலமானார். தற்போது தனது மகளுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடி கோடியாக சம்பளத்தை உயர்த்தும் அஜித்; அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம்

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்