நீயா 2 படத்துக்காக வரலட்சுமி எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்..! மனம்திறந்த இயக்குநர்

Advertisement

ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் நியா 2 படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார் இயக்குநர் சுரேஷ்.

நீயா 2

ஜெய், கேத்ரின் தெரஸா, வரலெட்சுமி, ராய் லெட்சுமி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் நியா 2. சுரேஷ் இயக்கியிருக்கும் இப்படம் 1979ம் ஆண்டு வெளியான நியா படத்தின் இரண்டாம் பாகம். ஆனால் நியா 2வின் கதைக்களம் முற்றிலும் வேறு. இப்படம் மே 10 ஆம் தேதியான நேற்று வெளியாக வேண்டியது. ஆனால், விஷாலின் அயோக்யா, அதர்வாவின் 100 படங்கள் இன்று வெளியாவதால் தியேட்டர் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் பின்வாங்கியது. ஆனால் சொன்னபடி அயோக்யாவும் 100 படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீயா 2

இந்நிலையில் நீயா 2 பட இயக்குநர் பேசுகையில், “ படத்தில் ஜெய்க்கு இரண்டு வித கேரக்டர்கள். சென்னையில் வேலை செய்யும் ஐடி ஊழியராக நடிக்கிறார். மற்றொரு கேரக்டர் ஃபிளாஸ்பேக்கில் வரும். அதே ஐடியில் வேலை செய்பவராக கேத்ரின் வருகிறார். அவரும் ஜெய்யை காதலிக்கிறார். கல்லூரி மாணவியாக வரும் ராய் லெட்சுமியும் ஜெய்யை காதலிக்கிறார். இப்படி முக்கோண காதல் கதை. இதில் வரலெட்சுமியின் கேரக்டர் சஸ்பென்ஸ். இந்தப் படம் தள்ளிப்போனதில் எந்த கவலையும் இல்லை. எப்பொழுது வெளியானாலும் நிச்சயம் வெற்றி பெறும். அதுமட்டுமின்றி, படத்தில் இடம் பெற்றிருக்கும் VFX காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

நீயா 2

படத்தின் ஒரு காட்சிக்காக கேரளாவில் இருக்கும் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் படப்பிடிப்பு நடத்தினோம். ராய் லெட்சுமி 300 அடி உயரத்தில் இருக்கும் நீர்வீழ்ச்சியில் இருந்து குதிப்பது மாதிரியான காட்சி. மிகவும் ரிஸ்க் எடுத்தே அந்தக் காட்சியை எடுத்தோம்” என்று கூறினார்.

ராகுலை விட்டுவிட்டு ராஜீவ் காந்தியை விமர்சிப்பதா?- மோடிக்கு பாஜகவிலேயே எதிர்ப்பு

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>