அதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்கள்..! தஞ்சையில் நடந்த பரபரப்பு நிகழ்வ

Tanjore corporation officers shop arrest

Jun 19, 2019, 09:25 AM IST

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, அல்லது உற்பத்தி செய்தாலோ, அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசால் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின் படி, தஞ்சை மாநகராட்சி நகர் நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சை கீழவாசல் பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது மார்க்கெட் ரோடு பகுதியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான கடையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சமயத்தில் 4 துப்புரவு ஆய்வாளர்கள், ஒரு பெண் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 6 பேர் கடைக்குள் சென்று பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் உள்ளதா? என்று சோதனை செய்ய முயன்றனர்.

அப்போது கடைக்குள் இருந்த 2 ஊழியர்கள் திடீரென வெளியே ஓடி வந்து கடையின் ஷட்டரை இழுத்து மூடினர். மேலும் கடைக்கு செல்லும் மின் இணைப்பையும் துண்டித்து விட்டு ஓட்டம் பிடித்தனர்.

சோதனைக்கு வந்த அதிகாரிகளை கடைக்குள் வைத்து ஷட்டரை இழுத்து பூட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடைக்குள் மாட்டி கொண்ட பெண் உள்பட 6 ஊழியர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினர்.

அப்போது வெளியே நின்றிருந்த நமச்சிவாயம் தலைமையிலான குழுவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு கடையின் ஷட்டரை திறந்து கடைக்குள் இருந்த 6 பேரையும் மீட்டனர்.

இந்த சம்பவம் பற்றி தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் கடைக்குள் வைத்து சிறை வைக்கப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

- தமிழ்

அமெரிக்க விசா பெறுவதற்கு சமூக ஊடக தகவல் கட்டாயம்

You'r reading அதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்கள்..! தஞ்சையில் நடந்த பரபரப்பு நிகழ்வ Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை