அத்திவரதர் தரிசனத்தில் தடபுடல் மரியாதை மதுரை ரவுடிக்கு ஆல் இன் ஆல் ஏற்பாடு திமுக புள்ளிகளாம்

Dmk men helped to Madurai rowdy for Athivaradhar dharshan, Kancheepuram collector says

by Nagaraj, Jul 18, 2019, 09:46 AM IST

காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்தின் போது மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு பரிவட்டம் கட்டி ஏக தடபுடலாக முதல் மரியாதை கொடுத்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. வரிச்சியூர் செல்வம் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்தது திமுக பிரமுகர்கள் என தெரிய வந்துள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

மதுரை வரிச்சியூர் செல்வம்... கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வெட்டு, குத்து. அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான இந்த மதுரை ரவுடியை தெரியாத போலீசார் யாரும் இருக்க முடியாது. கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்த ரவுடியின் பெயர் தமிழகம் முழுக்க வே பிரபலம். பல முறை சிறையில் பிடித்துப் போட்டாலும் எளிதில் வெளியில் வந்து விடுவார். குண்டர் சட்டம் கூட இவர் மீது பாய்ந்தது. சினிவாவில் வரும் வில்லன் போல மிரட்டலாக கலர்புல் டிரஸ் அணிந்து ஏராளமான நகைகளை அணிந்தபடி சொகுசு காரில் படு பந்தாவாக உலா வரும் இந்த ரவுடிக்கு அரசியல் புள்ளிகள் மட்டுமின்றி காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆசீர்வாதமும் உண்டு.

சில நாட்களுக்கு முன்பு இந்த ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கும், அவருடைய குடும்பத்தினர் மற்றும் கைத்தடிகளுக்கும் காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்திற்கு ஏக தடபுடல் மரியாதை செய்தது இப்போது சர்ச்சையாகி உள்ளது.அத்திவரதர் சன்னதி முன் இவர்களை அமர வைத்து பட்டம், பரிவட்டம் கட்டி,கோயில் நிர்வாகத்தினரும், அர்ச்சகர்களும் விவிஐபிக்களுக்கு கொடுக்கும் முதல் மரியாதை கொடுத்து கவுரவித்தனர். இந்தக் காட்சிகளுடன் கூடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி, கோயில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பில் இருந்த போலீசாரை ஏகத்துக்கும் விமர்சனத்துக்கு ஆளாக்கியது.

தினமும் லட்சக்கணக்கானோர் நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால்கடுக்க காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வரும் நிலையில், ஊரறிந்த ஒரு ரவுடிக்கு இத்தனை மரியாதையா? என்ற விமர்சனம் எழுந்தது. இதனால் ரவுடிக்கு விவிஐபி பாஸ் மற்றும் தரிசனம் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்த கருப்பு ஆடு யார்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பலரும் கண்டனக் குரல் எழுப்பினர்.

இதனால் ரவுடி வரிச்சியூர் செல்வம் அத்திவரதர் தரிசனம் செய்த விவகாரம் பூதாகாரமாக வெடிக்க வே, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர் ஆட்சியர் பொன்னையா கூறுகையில், இது தொடர்பான வீடியோக்கள் என் கவனத்துக்கும் வந்தன. வரிச்சியூர் செல்வத்தை அழைத்து வந்தது யார்? என்பதை கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்தோம். அவரை திமுக பிரமுகர்கள் அழைத்து வந்துள்ளனர். மேலும் வரிச்சியூர் செல்வம் உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் வந்துள்ளார்.

காவல் துறையினர் எப்படி அவரை அனுமதித்தனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார். தினமும் லட்சக்கணக்கணக்கான பக்தர்கள் அத்தி வரததை தரிசிக்க வருவதால் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் எந்தவித சிறப்பு அனுமதிச் சீட்டும் இல்லாமல் படு பந்தாவாக ரவுடி ஒருவர் தனது படை பரிவாரங்களுடன் விவிஐபி வழியில் சென்று அத்திவரதர் தரிசனம் செய்ததும், அவருக்கு அர்ச்சகர்களும் முதல் மரியாதை செய்ததும் இப்போது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.

அத்திவரதரை தரிசிக்க லட்சம் பேர் கூடும் காஞ்சியில் முதலுதவி வசதி இல்லாத அவல நிலை

You'r reading அத்திவரதர் தரிசனத்தில் தடபுடல் மரியாதை மதுரை ரவுடிக்கு ஆல் இன் ஆல் ஏற்பாடு திமுக புள்ளிகளாம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை