40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் நடைபெறும் காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவ திருவிழா நேற்று துவங்கியது. ஒரு லட்சத்திற்க்கும் மேற்ட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இரண்டாவது நாளும் பக்தர்கள் கூட்டும் அலைமோதுகின்றது. இந்நிலையில் காஞ்சிபுரம் கீரமண்டம் பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி அத்திவரதர் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது மேற்கு ராஜ கோபுரம் அருகே செட்டி தெருவில் மயங்கி கீழே விழுந்தார். அருகில் மருத்துவ முகாம் இருந்தும் சிகிச்சை அளிக்க மருத்துவர்களோ, செவிலியர்களோ யாரும் வரவில்லை. காரணம் மருத்துவமுகாமில் யாரும் இல்லை அருகில் இருந்த காவலர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைகாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு தனியார் வேன் மூலம் அனுப்பிவைத்தனர்.
மூதாட்டி மயங்கி கீழே விழுந்து 30 நிமிடங்களுக்கு மேலாக 108 வாகனமோ, முதலுதவி சிகிச்சையோ கொடுக்காத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.