சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதியில் அவர்கள் விருப்பப்படும் திட்டங்களை செய்து கொள்ள வசதியாக தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. தற்ேபாது, ஒரு தொகுதிக்கு ஆண்டுக்கு இரண்டரை கோடி ரூபாய், தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியில் பள்ளிக் கட்டடம், குடிநீர் தொட்டி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் விருப்பப்படி நிறைவேற்றலாம்.
இந்த தொகுதி மேம்பாட்டு நிதியை மூன்று கோடியாக உயர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று அவர், இதை அறிவித்தார்.
ஏழைப் பெண்களுக்கு 10 ஆடுகள் வழங்கப்படும்: எடப்பாடி அறிவிப்பு