14 கிலோ தங்க நகையுடன் யாத்திரை செல்லும் சாமியார்

Advertisement

கோல்டன் பாபா என்று அழைக்கப்படும் சுதிர் மக்கார் சாமியார், 14 கிலோ தங்கச் சங்கிலிகளை அணிந்து தனது 26வது கன்வார் யாத்திரையை தொடங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் பிரபல ரவுடிகள் பலரும் கழுத்து நிறைய தங்கச் சங்கிலிகளையும், கைகளில் பிரேஸ்லெட், மோதிரங்களையும் அணிந்து வலம் வருவார்கள். சமீபத்தில் கூட அத்திவரதரை தரிசிக்க வந்த முன்னாள் தாதா ஒருவரை கழுத்து நிறைய தங்கத்துடன் பார்த்திருப்பீர்கள்.


இதே போல், வடநாட்டில் ஒரு சாமியார் தங்க நகைகளுடன் உலா வருகிறார். அவரது பெயர் சுதிர் மக்கார் என்றாலும் அவரை ‘கோல்டன் பாபா’ என்றுதான் அழைக்கிறார்கள்.

வடமாநிலங்களில் சிவபக்தர்கள், ‘கன்வார் யாத்ரா’ என்ற பெயரில் ஹரித்துவார், கங்கோத்ரி போன்ற புனிதத் தலங்களுக்கு செல்வார்கள். கோல்டன் பாபாவும் ஆண்டுதோறும் கன்வார் யாத்திரை செல்கிறார். அவர் செல்லும் போது கழுத்து நிறைய தங்கச் சங்கிலிகளை அணிந்து ெகாள்வார். கைகளிலும் பெரிய தங்கக் காப்புகளை அணிந்திருப்பார். இந்த ஆண்டும் அவர் தனது யாத்திரையை தொடங்கியிருக்கிறார். நேற்று காசியாபாத் வந்த அவருக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

ஏற்கனவே அவரே தனக்கு சில பாதுகாவலர்களை வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு 20 கிலோவுக்கு தங்கச் சங்கிலிகளை அணிந்து சென்ற கோல்டன் பாபா, இந்த முறை அதை 14 கிலோவாக குறைத்து விட்டார்.

இது பற்றி கேட்ட போது அவர், ‘‘எனக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதனால், கொஞ்சம் சங்கிலிகளை குறைத்து கொண்டேன். கடந்த ஆண்டு எனது வெள்ளிவிழா ஆண்டு யாத்திரையை சிறப்பாக முடித்தேன். இப்போது 26ம் ஆண்டு யாத்திரையை சிவபெருமான் ஆசியுடன் தொடங்கியுள்ளேன்’’ என்றார்.
கோல்டன் பாபா யாத்திரையில் ஆடம்பரக் கார்களும் பவனி வருகின்றன. அவரது வருகையின் போது உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக காசியாபாத் எஸ்.பி. ஸ்லோக் குமார் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் மிகப் பெரிய ஜவுளி வியாபாரியாக திகழ்ந்த சுதிர் மக்கார் தனது வியாபாரத்தை விட்டுவிட்டு, சொத்துக்களை வாடகைக்கு விட்டார். அதன்பிறகு, சாமியாராகி இப்படி கோல்டன் பாபாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அத்திவரதர் தரிசனம் ; கூடுதல் வசதிகள், சிறப்பு அதிகாரிகள் நியமனம்" - தலைமை செயலாளர் தகவல்

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>