களை கட்டியது சீசன் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது

by எஸ். எம். கணபதி, Aug 7, 2019, 17:19 PM IST
Share Tweet Whatsapp

குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. அருவிகளில் இன்று தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தற்போது கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. வெயில் இல்லாமல் சாரல் அடிப்பதால், சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். அருவிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.


Leave a reply