வேலூர் முன்னணி நிலவரம் : அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் விறு விறு முன்னேற்றம் -13 ஆயிரம் முன்னிலை

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்று வரை முன்னணி நிலவரம் இழுபறியாக இருந்த நிலையில், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை விட தற்போது 13 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

 

வேலூர் மக்களவை தொகுதியில் கடந்த 5-ந் தேதி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் பெற்றார்.. பின்னர் மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 2699 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் தற்போது வாக்கு வித்தியாம் 13 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

முன்னணி நிலவரம் :

ஏ.சி.சண்முகம் (அதிமுக): 1,18,874

கதிர் ஆனந்த் (திமுக): 1,05,623

தீபலட்சுமி (நாம் தமிழர்) : 5,735

முதலில் வாக்கு வித்தியாசம் மிக குறைவாகவே இருந்ததால் திமுக, அதிமுக இடையே கடும் இழுபறி நிலவியது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னேறியுள்ளதால் அவருடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
in-nankuneri-congress-will-contest-and-dmk-contest-in-vikiravandi-by-election
விக்கிரவாண்டியில் திமுக.. நாங்குனேரியில் காங்கிரஸ்..
edappadi-not-helped-vijay-his-mersal-film-could-not-been-released-says-kadampur-raju
எடப்பாடி உதவி செய்யாவிட்டால் மெர்சல் படம் ரிலீஸ் ஆகியிருக்காது.. விஜய்க்கு அமைச்சர் பதிலடி..
actress-bhanupriya-charged-for-physical-harassment-of-minor-girl
சிறுமியை துன்புறுத்தியதாக பானுப்பிரியா மீது வழக்கு..
tamilnadu-muslim-leaque-request-govt-to-withdraw-the-g-o-banning-appointment-of-teachers-in-minority-institutions
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை.. மறுபரிசீலனைக்கு முஸ்லீம்லீக் கோரிக்கை..
nampikkai-trust-conducted-free-sugar-test-medical-camp-in-viruthunagar
நம்பிக்கை அறக்கட்டளை நடத்திய சர்க்கரை நோய் மருத்துவ முகாம்..
first-dmk-general-council-meet-after-stalin-assumed-as-party-president-on-oct-6-in-chennai-ymca-ground
திமுக பொதுக்குழு அக்.6ல் கூடுகிறது.. உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை
heavy-rain-and-lethargic-work-of-corporation-affects-chennai-peoples-normal-life
சென்னையில் கனமழை.. மாநகராட்சி மந்தம்..
no-school-leave-for-heavy-rain-in-chennai
விடிய விடிய கனமழை.. ஆனால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை!
will-rajini-speak-in-karnataka-about-common-lanquage-dmk-questions
கர்நாடகாவுக்கு போய் ரஜினி கருத்து சொல்வாரா? திமுக எழுப்பிய கேள்வி..
no-more-banner-culture-mkstalin-said
பேனர் கலாச்சாரமே இனி இருக்கக் கூடாது.. ஸ்டாலின் பேட்டி
Tag Clouds