துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது.இந்த விழாவுக்காக சென்னைவந்துள்ள பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெங்கய்யா நாயுடு, ஆற்றிய பணிகள், உரைகள், சந்திப்புகள், நிகழ்வுகளை, Listening, Learning and Leading என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு,மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரகாஷ் ஜவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். அமித் ஷாவை இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.