மேட்டூர் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து 111.81 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் வரத்து 30 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த வாரம் கன மழை கொட்டித்தீர்த்ததால், அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பின. இதனால் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விட்ட நீரின் அளவு 3 லட்சம் கன அடி அதிகரிக்கப்பட்டு, மேட்டூர் அணை நீர்மட்டம் 5 நாட்களில் 100 அடியை தாண்டியது.
தற்போது கர்நாடகா மற்றும் கேரளாவின் வயநாடு பகுதியில் மழை குறைந்து விட்டதால் அணைகளில் இருந்து நீர் திறப்பும் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று 50 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை 30 ஆயிரம் கன அடியாக சரிந்தது. அணைகீர் மட்டம் நேற்று 110.33 அடியாக இருந்த நிலையில் இன்று 111.81 அடியாக மெதுவாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பும் 81 டிஎம்சியாக உள்ளது. தற்போது கபினி அணையில் இருந்து 25,500 கன அடி நீர் மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. இதனால் நீர் வரத்து மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி ; 137 நாட்களுக்கு நீர் கிடைக்கும்