தீவிரவாதிகள் ஊடுருவலா? பயப்படத் தேவையில்லை கோவை கமிஷனர் பேட்டி

There is no need to worry about anything : Coimbatore City commissioner of Police

by எஸ். எம். கணபதி, Aug 23, 2019, 14:05 PM IST

தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளதால், எல்லா இடங்களிலும் காவல் துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் பயப்படத் தேவையில்லை என்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமீத் சரண் கூறியுள்ளார்.

தமிழகத்துக்குள் லஷ்கர் தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாக தமிழக டிஜிபிக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை வழியாக இந்த பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், குண்டு வெடிப்பு போன்ற நாச வேலைகளில் ஈடுபடலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, ரயில், விமான நிலையங்களில் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே பயங்கரவாதிகள் கோவையில் தாக்குதல் நடத்த குறிவைத்துள்ளதாகவும், அங்கு பதுங்கியுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஸ், ரயில், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து, கோவை மாநகர காவல் ஆணையர் சுமீத் சரண், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், ‘‘இலங்கை வழியாக தமிழகத்திற்குள் 6 தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கோவையில் வணிக வளாகங்கள் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது . கோவை முழுவதும் 2000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எல்லா இடங்களிலும் காவல் துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இதற்காக பொது மக்கள் பயப்படத் தேவையில்லை” என்றார்.

ப.சிதம்பரத்துக்கு திங்கட்கிழமை வரை சிபிஐ காவல்; சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்த வாதம்

You'r reading தீவிரவாதிகள் ஊடுருவலா? பயப்படத் தேவையில்லை கோவை கமிஷனர் பேட்டி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை