பாஜகவில் சேர்ந்தார் நடிகர் ராதாரவி..

by எஸ். எம். கணபதி, Nov 30, 2019, 13:11 PM IST
Share Tweet Whatsapp

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி இன்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்பாக அக்கட்சியில் இணைந்தார்.

திமுக, மதிமுக, அதிமுக என்று பல கட்சிகளில் இருந்தவர் நடிகர் ராதாராவி. கடைசியாக, திமுகவில்தான் இருந்தார். கடந்த மார்ச் மாதம் நடிகை நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், அவர் பேசும் போது, நடிகைக நயன்தாரா நல்ல நடிகை. இங்கு பேயாகவும், தெலுங்கில் சீதையாகவும் நடிக்கிறார். இப்போது யார் வேண்டுமானாலும் சீதையாக நடிக்கலாம்... என்று தவறாக பேசிவிட்டார்.

இதற்கு திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ராதாரவி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். அவர், “நான் கூறிய கருத்து உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ராதாரவி விளக்கம் அளித்தார்.

ஆனாலும் ராதாரவியின் பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்ததால், அவரை கட்சியில் இருந்து ஸ்டாலின் நீக்கி விட்டார். மேலும், ராதாரவியின் பேச்சுக்கு அவர் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகர் ராதாரவி இன்று காலையில் பாஜகவில் சேர்ந்தார். சென்னைக்கு வந்துள்ள பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னி்லையில் அவர் அந்த கட்சியில் சேர்ந்தார்.


Leave a reply