ஜெயலலிதாவின் 3வது நினைவு நாளான இன்று(டிச.5) அவரது சமாதியில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 3வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. அண்ணா சாலையில் இருந்து தொடங்கி, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி வரை பேரணி நடந்தது.
பின்னர், ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.