நித்தியானந்தா மாதிரி ஸ்டாலின் தீவு வாங்கலாம்.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்..

by எஸ். எம். கணபதி, Dec 10, 2019, 13:36 PM IST

ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்றால், நித்தியானந்தா மாதிரி தனி தீவு வாங்கிக் கொள்ளலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்தார்.

மூதறிஞர் ராஜாஜியின் 141-வது பிறந்த நாளையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாபாய் பாண்டியராஜன், ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் ஸ்டாலின் குழப்புகிறார். திமுக ஒரு குழப்பமான கட்சி, அதன் தலைவர் ஸ்டாலின் ஒரு குழப்பவாதி. ஸ்டாலின் குழப்பத்துக்குக் காரணம் அவரது முதல்வர் கனவுதான்.

ஸ்டாலின் மட்டுமல்ல, முதல்வராக விரும்புபவர்கள் யாராக இருந்தாலும், நித்தியானந்தா மாதிரி தனியாக ஒரு தீவை வாங்கி கொள்ளலாம். அங்கு அவர்களே முதல்வராக அறிவித்து கொள்ளலாம்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதனால்தான், அதை அதிமுக ஆதரிக்கிறது.

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.


More Tamilnadu News

அதிகம் படித்தவை