பயங்கரவாதத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் செயலாற்ற பாஜக வலியுறுத்தல்

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பயங்கரவாதத்தை எதிர்த்து செயலாற்ற வேண்டுமென்று பாஜக கூறியுள்ளது.
பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:


சென்னை பாடி சுரேஷ் கொலையில் தொடர்புடையவன்தான் அப்துல் சமீம். சமீபத்தில் அந்த கொலை வழக்கில் சிறையில் இருந்த அவன் உட்பட மூன்று பேர் பிணையில் வெளிவந்த நிலையில், அவர்கள் தலைமறைவானது குறித்து பதிவிட்டிருந்தேன். இவர்களால் பெரும் ஆபத்து நேரும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

BJPNarayanan
அதே போல், அப்துல் சமீம் களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார் என்றும், ஐ.எஸ். வழக்கில் தொடர்புடைய காஜா முகைதீன் மற்றும் சையது அலி நவாஸ் ஆகிய இருவரும் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று அரசு தரப்பு கூறியுள்ள நிலையில், அவர்களுடைய பிணையினை ரத்து செய்து உடனடியாக கைது உத்தரவு பிறப்பிக்க உத்தரவிடுமாறு அரசு வழக்கறிஞர் மனு செய்துள்ளார்.


நான் கடந்த வாரம் 3ம் தேதி குறிப்பிட்டிருந்தபடியே பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீதும், அதற்கு ஆதரவாக இருப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பயங்கரவாத செயல்களை கண்டித்து செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். ஊடகங்கள் இது குறித்த செய்திகளை தவிர்க்காமல் மக்களிடம் உண்மையை எடுத்து சொல்லவேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட.இவ்வாறு நாராயணன் கூறியுள்ளார்.